லண்டனில் கொலை செய்யப்பட்ட ஈழத்து இளைஞன் CCTV காணொளி

லண்டனில் இந்த வருடத்தில் நேற்று மாலை வரை 66 பேர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 65ஆவது கொலையாக யாழ்ப்பாணத்தை சோந்த அருனேஸ் தங்கராஜாவின் கொலை கருதப்படுகிறது.
அவர் மேற்கு லண்டனில் நேற்று முன்தினம் அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமாகியுள்ளார்.
இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை மாலை வடக்கு லண்டனில் ஒருவார் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது லண்டனில் இந்த வருடத்துக்குள் இடம்பெற்ற 66ஆவது கொலையாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொலையாளி தப்பிச்செல்லும் சி.சி.டி.வி காணொளியை லண்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த கொலை சம்பவத்தில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஸ்கொட்லாந்து பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்