ராஜிதவுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் சென்றுள்ள பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை, 20இலிருந்து 14ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன இதுத்தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாறு பெரிய குழுவொன்று இலங்கை சார்பில் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என, ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டராத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார பிரிவின் பிரதிப் பணிப்பாளர்களும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பிரதி சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

Allgemein