யாழில் திருக்குறள் தேர்வு

யாழ்ப்பாணத்தில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களின் நலன் கருதி திருக்குறள் தேர்வு நடைபெற்றது.
யாழ் தமிழ்ச்சங்கத்தினால்; நடத்தப்பட்ட இத்திருக்குறள் தேர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
இத்தேர்விற்காக 740 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று இடம்பெற்ற பரீட்சையில் 650 பேர் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச்சங்க தேர்வு மேற்பார்வை அணியினருடன் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள் 24 பேர் நோக்குநர்களாக இதில் பங்கேற்றனர்.
தேர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அண்மையில் அகாலமரணமடைந்த தமிழாசிரியை கவிதா ஜெயசீலனின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் இரண்டு நிமிடங்கள் அமைதிப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தேர்வு தொடர்பான பெறுபேறுகள் எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்தில் (www.thamilsangam.org) வெளியிடப்படும் என்று தேர்வு இணைப்பாளர் கு.பாலஷண்முகன் தெரிவித்தார்.