புதுக்­கு­டி­யி­ருப்பு முல்­லைத்­தீவு பகுதியில் 3 மணி நேரம் ஏற்பட்ட பயங்கரம்!!

புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்­றுக் காற்­று­டன் பெய்த மழை­கா­ர­ண­மாக தற்­கா­லிக வீடு­கள் பல சேத­ம­டைந்­தன. பயன்­தரு மரங்­கள் பல முறிந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.
பிற்­ப­கல் 3.30 தொடக்­கம் 6 மணி­வரை புதுக்­கு­டி­யி­ருப்பு முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வளை போன்ற பகு­தி­க­ளில் கடும் காற்­று­டன் மழை பெய்­தது. இடை­யிடை மின்­னல்­கள் பதி­வா­கின. பல இடங்­க­ளில் மின்­னல் தாக்கியுள்ளது.
அத­னால் பல­ரது வீட்­டில் உள்ள இலத்­தி­ர­னி­யல் பொருள்­கள் பழு­த­டைந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.
கைவே­லிப் பகு­தி­யில் இரண்டு தற்­கா­லிக வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ளன. பயன்­தரு மரங்­க­ளும் முறிந்­துள்­ளன. மரு­தங்­கு­ளம் சுரேஸ் வீட்­டுத்­திட்ட பகு­தி­யி­லும் இரண்டு தற்­கா­லிக வீடு­கள் காற்­றால் தூக்­கி­வீ­சப்­பட்­டுள்ன. ஜம்­ப­திற்கு மேற்­பட்ட வாழை­ம­ரங்­கள் முறிந்து வீழ்ந்­துள்­ளன.
மக்­க­ளின் வீடு­கள் பாதிப்­புக் குறித்து கைவேலி கிராம அலு­வ­லர் சம்­பவ இடத்­திற்­குச் சென்று பார்­வை­யிட்­டார். வீடு­கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதிர்­வ­ரும் திங்­கட் கிழமை தறப்­பாள்­கள் வழங்க ஏற்­பாடு செய்து தரு­வ­தா­கக்­கூறி பாதிக்­கப்­பட்ட விப­ரங்­களை எடுத்­து­விட்டு சென்­றுள்­ளார் என்று பிர­தேச மக்­கள் தெரி­வித்­த­னர்.

தாயகச்செய்திகள்