தமிழீழ படுகொலை தொடா்பில் விசாரணை இடம்பெறுமா?

இலங்கையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பில் எதிர்வரும் வருடங்களில்,
சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான சூழல் உள்ளதாக கூறியுள்ளாா் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி,
நேற்று மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.துரைரெட்னம் உட்பட,
பிரதேசபையின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.