கடாபியின் முடிவே வடகொரிய தலைவருக்கு ஏற்படலாம்;அமெரிக்க எச்சரிக்கை

வடகொரிய தலைவர் கிம் ஜூன் உன் லிபியாவின் தலைவர் கடாபிக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படுமென அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதம் தொடர்பில் வடகொரியா மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் இதற்கு வழிவகுக்குமென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வடகொரிய தலைவர் அணு ஆயுத செயற்திட்டங்கள் தொடர்பில் தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே இருப்பதை சுட்டிக்காட்டியே டொனல்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமக்கும் வடகொரிய தலைவருக்குமிடையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் பட்சத்தில் அது வடகொரியாவிற்கு மிகவும் பாதுகாப்பானதொரு நிலையை ஏற்படுத்துமெனவும் அமெரிகக் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.