விமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு

தியத்தலாவை விமானப்படை பயிற்சி முகாமில் கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு வெடித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது 3 பெண் விமானப்படை வீராங்கனைகள் படு காயமடைந்த நிலையில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.