கோத்­தா­வின் அதிரடி திட்­ட­மும் தமி­ழர்­க­ளின் எதிர்கா­ல­மும்!

கொழும்­பில் ஆட்­சி­யில் உள்ள அர­சில் ஏற்­பட்­டுள்ள குழப்­பம் அல்­லது அர­சி­ய­லின் நிலை­யற்ற தன்மை அடுத்த அரச தலை­வர் யார் என்­பது குறித்த தேட­லைப் பெரு­மெ­டுப்­பில் உரு­வாக்­கி­யி­ருப்­பது பட்­ட­வர்த்­த­ன­மா­கத் தெரி­கின்­றது.
அடுத்­த­தாக மாகாண சபைத் தேர்­தலே வர­வுள்­ளது (அது நடக்­குமா நடக்­காதா என்­கிற சந்­தே­கங்­கள் இருந்­தா­லும் சட்­டப்­படி அடுத்த தேர்­தல் அது­தான்).
ஆனால் மாகாண சபைத் தேர்­தல் மீதான கவ­னத்­தை­விட 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்­தில் வர­வுள்ள அரச தலை­வர் தேர்­த­லைக் குறி­வைத்த நகர்­வு­கள் கொழும்­பில் மும்­மு­ர­மா­கி­யி­ருக்­கின்­றன.
அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் பொது வேட்­பா­ளர் ஒரு­வர் இல்லை என்­கிற திட­மான முடிவை நோக்கி ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் நகர்ந்து வரு­கின்­றன.
பொது வேட்­பா­ளர் ஒரு­வர் இல்­லை­யென்­றால் இந்த இரு கட்­சி­க­ளி­ன­தும் சார்­பில் உள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு முகங்­க­ளுமே கவர்ச்­சி­க­ர­மா­னவை அல்ல.

இந்த இரு முகங்­க­ளும் இணைந்­த­போது கிடைத்த ஒளி வெள்­ளம், கவர்ச்சி மெல்­ல­மெல்ல மங்கி மூன்று ஆண்­டு­க­ளுக்கு இடை­யி­லேயே காணா­மற் போய்­விட்­டது.
கூட்­டணி ஆட்­சி­க­ளில் இத்­த­கைய இழு­ப­றி­க­ளும் பின்­னி­ழுப்­பு­க­ளும் நிகழ்­வது வழ­மை­தான் என்­றா­லும் இந்­தக் கூட்­டாட்­சி­யிலே அவை மோச­மான அள­வில் பெருத்து உருப்­ப­டி­யான, அவ­சி­ய­மான விட­யங்­கள் பல­வும் நடக்­கா­மல் ஆக்­கி­விட்­டன.
அல்­லது மிக மிக மெது­வாக ஒவ்­வொன்­றும் நடக்­கின்­றன. குறிப்­பாக லஞ்ச, ஊழல் அர­சி­யல் ஆட்­சி­யில் இருந்து நாட்டை மீட்­டெ­டுத்­துப் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யில் முன்­ன­கர்த்­து­வார்­கள் என்­கிற எதிர்­பார்ப்பு பொய்த்­துப்­போய்­விட்­டது.
இனப் பிரச்­சி­னைக்கு அர­சி­யல் தீர்­வைக் காண்­பார்­கள் என்­கிற எதிர்­பார்ப்­பும் பொய்த்­துப் போய்­விட்­டது.
இவ்­வாறு மக்­கள் எதிர்­பார்த்த பெரும் மாற்­றங்­களை உரு­வாக்­கக்­கூ­டிய பெரு வெற்­றி­களை இந்த அரசு பெறத் தவ­றி­ய­தன் விளை­ வாக, உறு­தி­யான, செயற்­றி­றன் உள்ள ஒரு தலை­வ­ரும் ஆட்­சி­யும் தேவை என்­கிற மனோ நிலையை நோக்கி மக்­கள், குறிப்­பா­கச் சிங்­கள மக்­கள் நகர்­வ­தைக் காண­மு­டி­கின்­றது.
அவர்­க­ளின் இந்­தத் தேட­லுக்­கான முக­மாக கூட்டு எதி­ரணி கோத்­த­பாய ராஜ­பக்­ச­வைக் கள­மி­றக்­கும் தயார்ப்­ப­டுத்­தல்­களை ஆரம்­பித்­து­விட்­டது.
30 வரு­டங்­க­ளாக நீடித்த போரை உறு­தி­யான தலை­மைத்­து­வத்­தின் மூலம் முடித்து வைத்த ஆளுமை என்­கிற விம்­பம் கோத்­த­பா­ய­வின் மீது ஆணித்­த­ர­மாக விழுந்­தி­ருக்­கி­றது.
அதனை மூல­த­ன­மாக்கி கோத்­த­பா­யவை அரச தலை­வ­ருக்­கான போட்­டிக் களத்­தில் இறக்­கி­வி­டும் வியூ­கமே இது. அதற்­கான முன்­னேற்­பா­ டா­கவே சீன (கொங்­கொங்) பல்­தே­சிய நிறு­வ­ன­மான ஷங்­க­ரில்லா உயர் நட்­சத்­திர விடு­தி­யில் சுமார் 2 ஆயி­ரம் பேரைத் திரட்டி ‘அறி­வி­யல் மிகுந்த இலங்கை’ என்ற தொனிப் பொரு­ளில் அவர் உரை­யாற்­றி­னார்.
அந்த உரை­யிலே பொரு­ளா­தார வளர்ச்­சி­யால்­தான் இலங்­கையை வெற்­றிப் பாதை­யில் கொண்டு செல்ல முடி­யும் என்­கிற கருத்­தைத்­தான் அவர் முக்­கி­ய­மா­கக் கூறி­யி­ருக்­கின்­றார். கோத்­த­பா­ய­வின் இந்­தக் கருத்துப் புதி­ய­தல்ல.
அவ­ரது மூத்த சகோ­த­ர­னான மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில், போருக்­குப் பின்­ன­ரான காலத்­தி­லும் இதே கொள்­கை­தான் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.
பொரு­ளா­தா­ரத்தை உயர்த்­து­வ­தன் மூலம் தமி­ழர்­க­ளின் உரி­மைப் பிரச்­சி­னை­யை­யும் முடி­வுக்­குக்­கொண்டு வந்­து­வி­ட­லாம் என்ற கொள்­கையே முன்­வைக்­கப்­பட்­டது.
பல நேர்காணல்களிலேயே வடக்கு கிழக்­கில் இருப்­பது பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னையே தவிர இனப் பிரச்­சினை இல்லை என்று கோத்­த­பாய ராஜ­பக்ச அழுத்­திக் கூறி வந்­தி­ருக்­கி­றார்.
அவர் ஆட்­சிக்கு வந்­தால் மீண்­டும் அதே கொள்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே ஆட்சி அமை­யும் என்­ப­தையே அவ­ரது ஷங்­க­ரில்லா உரை தெளி­வு­ப­டுத்­து­கின்­றது.
தமி­ழர்­கள் மத்­தி­யில் இந்­தக் கொள்கை எவ்­வ­ளவு தூரம் எடு­ப­டும் என்­பது கேள்­விக்­கு­ரி­யதே! போருக்­குப் பின்­னர் வடக்­கின் பௌதிக அபி­வி­ருத்­தி­யில் மகிந்த அரசு பெரு­ம­ள­வில் முத­லிட்­ட­ போ­தும் அத­னைத் தமிழ் மக்­கள் ஒரு பொருட்­டா­கக் கரு­தி­னார்­கள் இல்லை என்­பது வர­லாறு.
ஆனா­லும் கோத்­த­பாய ஆட்­சிக்கு வந்­தால் என்ன நடக்­கும் என்­பதை அவர் அழுத்­த­மா­கச் சொல்­லிச் சென்­றி­ருக்­கும் இன்­றைய நிலை­யில் மீண்­டும் பழைய நிலைக்கே திரும்­பிச் செல்­வ­தாக என்­ப­தையே தமிழ் மக்­கள் சிந்­திக்க வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள்

Allgemein