அரச முகாமைத்துவ உதவியாளர் பதவி அரசாங்கத்துக்கே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


அரச முகாமைத்துவ உதவியாளர் பதவி அரசாங்கத்துக்கோ, அதிகாரத்திலுள்ளவர்களுக்கோ சேவையாற்றுவதற்கான பதவியாக எவரும் கருத முற்படக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
பொது நிருவாக அமைச்சின் கீழ் இயங்கும் அரச முகாமைத்துவ சேவையில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் இன்று முதல் அரச ஊழியர்களாக உள்வாங்கப்பட்டுள்ளீர்கள். மக்களுக்குச் சேவையாற்றுபவர்களாகவும் நீங்கள் பதவியேற்றிருக்கின்றீர்கள்.மக்களுக்கும், நாட்டுக்கும் பணிபுரிவதற்காகவே நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று தெரிவித்த பிரதமர் , அரசின் திட்டங்களையும் அபிவிருத்தி முயற்சிகளையும் மக்கள் மத்தியில் கொண்டுசென்று அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்தி நாட்டின் அரசியல், பொருளாதார ஸ்திர நிலையை உத்தரவாதப்படுத்தும் பாரிய பொறுப்பு உங்களுன்கு உண்டு எந்தவொரு திட்டத்திலும் முகாமைத்துவ உதவியாளர்களின்றி அதனை வெற்றிகொள்ள முடியாது.
தனியார்துறையை ஊக்குவித்து அதனூடாக அரச துறைக்கு ஈடான வேவைய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. வெளிநாட்டு தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் இதனை முன்னெடுக்கவுள்ளோம் என்றும் கூறினார்.
அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நிர்வாகத்துறையை முன்னெடுப்பதன் மூலம் அடுத்த இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தில் எம்மால் உயர்ந்த நிலைக்குச் செல்லமுடியும்
வரலாற்றில் முன்னொரு போதுமில்லாத விதத்தில் அதிகூடிய ஏற்றுமதியை 2017ல் மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும் 1900 மில்லியன் டொலர் தனியார்துறை முதலீடுகளை இதே ஆண்டில் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Allgemein