யாழில் சிக்கிய முக்கியஸ்தர்கள்!

வாள்­வெட்­டில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் மேலும் 2 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நீர்­வே­லி­யில் கோயி­லில் கடந்த திங்­கட்­கி­ழமை வாள்­வெட்டு இடம்­பெற்­றது.
மறு­நாள் வாள், மோட்­டார் சைக்­கி­ளு­டன் 3 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். 5 பேர் தேடப்­ப­டு­கின்­ற­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர்.
இந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து யாழ்ப்­பாண மாவட்ட பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் சிறப்­புப் பொலிஸ் பிரி­வி­னர் 2 பேரை நேற்­றுக் கைது செய்­த­னர்.
சாவ­கச்­சே­ரி­யைச் சேர்ந்த அவர்­கள் 21,28 வய­து­டை­ய­வர்­கள். விசா­ர­ணைக்­காக கோப்­பாய் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

தாயகச்செய்திகள்