முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் சீ.வீ.கே.சிவஞானம் – அனந்தி – ரவிகரன்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமது அடுத்த அரசியலிற்கான முதலீட்டாக வடமாகாணசபையின் சில தரப்புக்கள் முற்பட்டுள்ளமைய கடந்த சில நாட்களாக நீடித்த குழப்பங்களிற்கு காரணமென முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டுக்களினை எழுப்பியுள்ளனர்.
இத்தகைய தரப்புக்களே குழப்பங்களை ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் வசம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செல்லக்கூடாதென அத்தரப்புக்கள் முனைப்புடன் செயற்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் முதலமைச்சரிற்கு எதிராக மாணவ சமூகம் மற்றும் பொது அமைப்புக்களை தூண்டிவிடுவதிலும் இத்தரப்புக்கள் முனைப்புடன் உள்ளன.
வலிசுமந்த நாங்கள் ஒதுங்கி நிற்க எவரெவரோ குளிரூட்டப்பட்ட கார்களில் வந்து எம்மை பற்றி கதைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இவர்களுள் முக்கியமானவர்களாக தமிழரசுக்கட்சியை சேர்ந்த சீ.வீ.கே.சிவஞானம்,து.ரவீகரன் மற்றும் தற்போது கட்சியேதுமின்றி அடுத்த தேர்தலிற்காக ஆசனம் பிடிக்க இப்போதே அலைந்து திரியும் அனந்தி போன்றவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நினைவேந்தல் மாணவர்கள் உள்ளிட்ட பொது தரப்புக்களிடம் செல்வதை தடுக்க கடுமையாக பாடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களிற்கு பிரதான காரணமாக இருந்தவர் துரைராசா ரவிகரன்.விடுதலைப்புலிகளிற்குரிய எட்டு மில்லியன் பணத்தை சுருட்டி தப்பித்த அவர் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரே ஊர் திரும்பியிருந்தார்.
அவரே நிகழ்ச்சி நிரலை தாண்டி இரா.சம்பந்தன்,சுமந்திரன் ஆகியோரை தருவிக்க உதவியிருந்தார்.அவர்களிற்கு வெள்ளையடிக்கும் அந்நாடகத்தை அரங்கேற்ற சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் பேரம் பேசியிருந்தனர்.
பேரத்தின் பிரகாரம் தமிழரசுக்கட்சியில் து.ரவிகரனை இணைக்கவும் அடுத்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்கவும் முடிவாகியிருந்தது.
ஆனால் கடைசி நேரக்குழப்பங்களால் சம்பந்தர் மக்களிடம் செருப்பெறி வாங்கி அவமானப்பட்டு வெளியேறவேண்டிய அவலம் நடந்திருந்தது.
ஆனாலும் உறுதியளித்தபடி து.ரவிகரனை தமிழரசுக்கட்சியில் மாவை முன்னிலையினில் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் பின்னர் இணைத்துக்கொண்டனர்.
தற்போதும் குழப்பங்களின் மையமாக து.ரவிகரன் செயற்பட்டுவருகின்றார்.அதனால் அவர் ஏனையவர்களது தூண்டுதலில் செயற்படுவது உறுதியாகியிருக்கின்றது.
ஒருபுறம் மாணவர்களை முதலமைச்சரிற்கு எதிராக தூண்டிவிடுவது மறுபுறம் முல்லைதீவில் மக்களிடையே தன்னை நிலைநிறுத்திக்கொள்வதென து.ரவிகரனது திட்டமாகவுள்ளது.
வழமையாக வடமாகாணசபையின் நினைவேந்தல் என்பது 30 உறுப்பினர்களிடமும் தலா 5ஆயிரம் வாங்கி தாங்கள் குளிரூட்டப்பட் வாகனங்களில் வந்து விளக்கேற்றிவிட்டு செல்லும் சடங்கேயாகும்.
ஊடகங்களது புகைப்படப்பிடிப்பு முடிந்ததும் வீடு திரும்பிவிடும் அவர்களது ஊர் உலகலெ;லாம் தமது புகைப்படங்கள் பிரசித்தமாவதையே நோக்கமாக கொண்டிருப்பது வழமை.
அதனையே இம்முறையும் அவர்கள் செய்யமுற்பட்டுள்ளனர்.
இதேவேளை இனி எந்தக்கட்சியில் போட்டியிடுவதென தெரியாது அல்லாடும் அனந்தி தமிழரசுடன் உறவை புதுப்பித்துக்கொள்ள இந்த நாடகத்தில் பங்காளியாகியுள்ளார்.
இந்நிலையில் இம்முறையும் வெறும் சடங்காக விளக்கேற்றி கலையும் இவர்களது நாடகம் கேள்விக்குள்ளாகுமென மாணவ சமூகம் உறுதியாக சொல்கின்றது.
முள்ளிவாய்க்கால் பொது அமைப்புக்கள் முதல் பல தரப்புக்களும் தற்போது மாணவ தரப்புக்களுடனேயே நிற்பதே அவர்களது பலமாக இருக்கின்றது.

தாயகச்செய்திகள்