முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் அறிமுகம்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் பல்கலைக்கழக பௌதீகவியல் அலகு இயக்குனர் திரு கணேசநாதன் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கண்காட்சிப்படுத்துப்பட்ட கார்கள் விசேஷ தனியான வடிவமைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
Jaffna Style Gokart , Solar powered Baby car,Pedal power car ,Ultralight Pickup எனப் பெயரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட அந்த கார்கள் அனைத்தும் கண்காட்சியின் ஒரு நிகழ்வாக கார்ப்பவனியாக வலம் வந்தது.சிறுவர்களும் எளிதாக அந்த கார்களை செலுத்திதிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கார்களின் தயாரிப்பில் யாழ் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறை பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ அய்யர் அவர்களின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிடப்படுகிறது.

Allgemein