நீர்வேலி வாள்வெட்டு: இன்று சிக்கிய இருவர்!-

நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நாவற்குழியைச் சேர்ந்த இருவரே இன்று (12) சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூவர் வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்தனர்.
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாயகச்செய்திகள்