ஈரானுக்கு அழிவு!! – ட்ரம்ப்

ஈரானுடனான அணுவாயுத் பரவல்த் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது அமெரிக்கா. இதனால் ஈரான், அணுவாயுதச் சோதனையில் மீண்டும் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகக் கருதப்படும் நிலையில் அவ்வாறு ஈரான் ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டால் அந்த நாடு பேரழிவைச் சந்திக்க வேண்டிவரும் என்று தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ஈரானுடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டமை தொடர்பில் அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஈரானுடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டுள்ளதே தவிர அந்த நாட்டின் மீது எந்தப் பொருளாதாரத் தடையையும் விதிக்கவில்லை. அடுத்த மூன்று மாதங்கள் வரையில் ஈரானின் நகர்வுகள் நுணுக்கமாகக் கண்காணிக்கப்படும். ஈரான் ஏவுகணைச் சோதனைகள் எதையும் செய்யக்கூடாது. அவ்வாறு ஏவுகணைச் சோதனைகளில் அந்தநாடு ஈடுபட்டால் பேரழிவைச் சந்திக்க வேண்டிவரும் என்று ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்

உலகச்செய்திகள்