இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள பயங்கர சம்பவம்

திருகோணமலை – சிரிமா புர பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர், சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் மற்றும் ஒர் சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த சிலருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் பின்னர் இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து திருகோணமலை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

தாயகச்செய்திகள்