சம்பந்தன் பதவி விலக வேண்டும் என கூறிய ஜீ.எல்.பீரிஸ்: காரணம் உள்ளே

வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதியான இரா.சம்பந்தன் அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை காட்டவில்லை.
இதன் காரணமாகவே, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது.
எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து சம்பந்தன் விலக வேண்டும்.
என கூறியுள்ளாா் முன்னாள் அமைச்சர் “ஜீ.எல்.பீரிஸ்”.
இரா.சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாத்து, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றாா்.
இவ்வாறு குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சா்,
உலக நாடுகளிலுள்ள எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவா்களும், தங்கள் நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதில்லை.
ஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேலுள்ளவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein