கைது செய்யப்பட்ட இலங்கையர் 43 பேரிடம் ஐ.நா. அடையாள அட்டை

மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களில் 43 பேருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளது என்று இலங்கை அயலுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் கூறப்படுவதாவது,
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு கடல் வழியாக மலேசியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற 131 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 127 சட்ட விரோதமாக மலேசியாவிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டிலும், 4 பேர் சட்ட விரோத ஆள்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகச்செய்திகள்