அனைவரிடமும் மன்னிப்பு கோரிய ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு முற்றிலும் எதிர்பார்க்காத அளவிலான ஆதரவாளர்கள் திரண்டு வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அளவில் ஆதரவாளர்கள் திரண்டு வருவார்கள் என தான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், இத்தனையளவு ஆதரவிற்கு முன்கூட்டியே ஆயத்தமாகியிருந்தால் வேறு இடத்தில் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருப்போம் எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தினை எதிர்பார்த்து வருகைத்தந்து அரங்கத்திற்கு உள்ளே இடம் கிடைக்காததால் வெளியே நிற்கும் அனைவரிடமும் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 30 முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாததன் காரணமாகவே இவ்வாறு அக்கட்சி முக்கியஸ்தர்கள் மே தினக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Allgemein