டெலோவை கழட்டிவிட கூட்டமைப்பு திட்டம்?

கூட்டமைப்பில் இணைந்திருக்க விருப்பமில்லையெனில் இப்பொழுதும் டெலோ அமைப்பு விலகிச்செல்ல முடியுமென கூட்டமைப்பின் அடுத்த தலைவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்தினால் அதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் பரிசீலிக்க தயாராக இருப்பதாக அண்மையில் கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களிடையே கருத்துதெரிவித்திருந்தார்.மறுபுறம் டெலோவின் மற்றொரு பிரமுகரான சிறீகாந்தாவோ அதனை எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்மையில் வவுனியா நகரசபை பறிபோனமை தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை சிவசக்தி ஆனந்தன் மீது எடுக்கவேண்டுமென சுமந்திரன் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அங்கு பிரச்சன்னமாகியிருந்த கே.சிவாஜிலிங்கம் மீதும் பாய்ந்துவிழுந்த எம்.ஏ.சுமந்திரன் கூட்டமைப்பில் இணைந்திருக்கவிருப்பமில்லையெனில் டெலோ அமைப்பு விலகிச்செல்ல முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கே.சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கருத்து தெரிவித்த வேளை சீறிப்பாய்ந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் முதலமைச்சரை காப்பாற்றி கூட்டமைப்பிற்கு துரோகமிழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் உள்ளுராட்சி சபை தேர்தலின் போதும் டெலோ பிரிந்து செல்லப்போவதாக தெரிவித்திருந்தது.
தேவையெனில் தற்போது அவர்கள் பிரிந்து செல்லமுடியுமென தெரிவித்துள்ளதுடன் அதனால் கூட்டமைப்பிற்கல்ல அவர்களிற்கே இழப்பேற்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

தாயகச்செய்திகள்