லசந்த படுகொலையில் முக்கிய புள்ளிக்கு தொடர்பிருப்பதாக சுமந்திரன் சாடல்

லசந்­த­வின் படு­கொலை தொடர்­பான வழக்கு இன்­ன­மும் இழு­ப­டு­கின்­றது. குற்­றப் புல­னாய் வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு இது­வரை கொடுத்த அறிக்­கை­ களை வாசித்­துப் பார்த்­தால் முன்­னாள் பாது­காப்பு செய­லர் (கோத்­தா­பய ராஜ­பக்ச) இரண்டு மூன்று தட­வை­கள் கைது செய்­யப்­பட்டு இருக்­க­வேண்­டும். இது யாருக்கு கீழே நடந்­தி­ருக்­கின்­றது என்று எழுத்தில் கொடுத்­தி­ருக்­கின்­றார்­கள்.
இவ்­வாறு தமிழ்த் தேசி­ யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.
உத­யன் பத்­தி­ரி­கை­யின் ஏற்­பாட்­டில், நேற்று நடத்­தப்­பட்ட வேட்கை நிகழ்­வில், தமிழ் ஊட­கங்­க­ளின் செல் நெறி­யும், அது பய­ணிக்க வேண்­டிய திசை­யும் என்ற தலைப்­பில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
ஊட­க­வி­ய­லா­ளர் கீத் நொயார் தாக்­கு­தல் யாரின் உத்­த­ர­வில் நடந்­துள்­ளது என்று குற்­றப் புல­னாய்­வுத்­துறை நீதி­மன்­றுக்கு கூறி­யி­ருக்­கின்­றது. அப்­பி­டி­யி­ருந்­தும் விசா­ரணை நக­ர­வில்லை.
லசந்த கொல்­லப்­ப­டு­வ­தற்கு முன்­னர் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் சண்­டே­லீ­டர் பத்­தி­ரி­கைக்கு எதி­ராக 2 வழக்­கு­கள் தாக்­கல் செய்­தி­ருந்­தார். இனி­மேல் என்­னைப் பற்றி அவ­தூ­றா­கப் பிர­சு­ரிக்­கக் கூடாது என்று இடைக்­கால உத்­த­ரவு கூடப் பெற்­றி­ருந்­தார். லசந்த படு­கொலை செய்­யப்­பட்ட பின்­னர், அந்­தப் பத்­தி­ரி­கைக்­காக முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­கள் பயந்து வில­கி­விட்­டார்­கள்.

வேறொரு சட்­டத்­த­ர­ணி­க­ளி­டம் அது கொடுக்­கப்­பட்­டது. முதல் நாள் நீதி­மன்­றில், கோத்­த­பா­ய­வின் தரப்பு சட்­டத்­த­ர­ணி­கள், சத்­தம் போட்­டார்­கள். லசந்த கொல்­லப்­ப­டு­வ­தற்கு முன்­னர் எழு­திய இறுதி ஆசி­ரி­யர் தலை­யங்­கத்­தி­லும் கோத்­த­பா­ய­வுக்கு அவ­தூறு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்­கள். நீதி­மன்ற இடைக்­கால தடை உத்­த­ரவு இருக்­கும் நிலை­யி­லும் இவ்­வாறு செய்­துள்­ளார்­கள் என்று சத்­தம் போட்­டார்­கள். அந்­தப் பத்­தி­ரி­கைக்­காக முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­க­ளும் அதன் பின்­னர் வர­வில்லை.
அந்த வழக்கு என்­னி­டம் வந்­தது. நான் முதல் நாள் மன்­றில் முன்­னி­லை­யாகி வீடு திரும்­பும்­போது, பாது­காப்பு அமைச்­சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யப் பக்­கத்­தில் கட்­டுரை தர­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அதில், எனது படத்­தை­யும் என்­னு­டன் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­க­ளி­ன­தும் படத்­தைப் பிர­சு­ரித்து, கறுப்பு கோர்ட் போட்ட துரோ­கி­கள் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்­கள்.
அடுத்த நாள் மன்­றுக்கு என்­னு­டன் 33 சட்­டத்­த­ர­ணி­கள் வந்­தார்­கள். சட்­டத்­த­ர­ணி­கள் சங்­க­மும், இந்­தக் கட்­டு­ரைக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தது. இரண்டு வாரங்­க­ளின் பின்­னர் அந்­தக் கட்­டு­ரையை பாது­காப்பு அமைச்­சின் பக்­கத்­தி­லி­ருந்து நீக்­கி­னார்­கள்.
அந்த வழக்­கில் முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­சவை இரண்டு தட­வை­கள் குறுக்கு விசா­ரணை செய்­தேன். ஒவ்­வொரு நாளும் மூன்று மணித்­தி­யா­லம் குறுக்கு விசா­ரணை செய்­தேன். எந்­தப் பத்­தி­ரி­கை­யும் பிர­சு­ரிக்­க­வில்லை. இன்று வரை­யில் ஒரு பத்­தி­ரி­கை­யும் பிர­சு­ரிக்­க­வில்லை.
பிர­திப் பொலிஸ்மா அதி­பர் அனுர, நீதி­மன்ற வாச­லில் நின்று ஒரு ஊட­க­வி­ய­லா­ள­ரை­யும் வர­வி­ட­வில்லை. உள்­ளுக்கு தப்­பித் தவறி வந்­த­வர்­க­ளை­யும் காதைப் பிடித்து வெளியே அனுப்­பி­னார்­கள். அதன் பின்­னர், உத்­தி­யோ­க­பூர்வ விசா­ரணை அறிக்கை வந்த பின்­ன­ரும் அதை­யா­ரும் பிர­சு­ரிக்­க­வில்லை என்­றார்.

தாயகச்செய்திகள்