முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் அனை­வ­ரும் ஓர­ணி­யில் திர­ளுங்­கள்

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் தினத்­தில் அனைத்து உற­வு­க­ளும், அமைப்­புக்­க­ளும் , அர­சி­யல்­கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து ஓர­ணி­யாக ஒன்­று­பட்டுச் செய­லாற்ற வேண்­டும் என்று ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.
அந்­தக் கட்­சி­யின் ஊட­கப் பேச்­சா­ளர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் உள்­ள­தா­வது-,

இலங்கைத் தீவில் தமிழ் மக்­க­ளும் இறை­யாண்மை உள்ள ஆட்சி அதி­கா­ரங்­க­ளுக்கு உரித்­து­டை­ய­வர்­கள். இந்­தச் செல்­நெ­றிப்­போக்கு கடந்த காலங்­க­ளில் இடர்­பா­டு­களை எதிர்­கொண்ட வேளை­க­ளில்­தான் தமி­ழர்­கள் தமது தார்­மீக அடிப்­ப­டை­யி­லான அர­சி­யல் உரி­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆயு­த­மேந்தி போரா­டி­னர்.
இன விடு­த­லைக்­காக அதி­யுச்­சம் பெற்ற ஆயு­தப் பொறி­முறை அதி­க­ள­வான பொருள்­சே­தங்­க­ளை­யும் அதி உன்­ன­த­மான உயிர்ச்­சே­தங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தி­ய­பின் நிறை­வுற்­றுள்­ளது.
முள்­ளி­வாய்க்­கால்­மண் கூறி நிற்­கின்ற செய்­தியை சர்­வ­தே­ச­மும், இலங்கை அர­சும், பன்­னாட்டு அர­சு­ற­வி­ய­ளா­ளர்­க­ளும் தாம் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்ற எண்­ணம் அவர்­க­ளுக்கு இது­வ­ரை­யில் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வில்லை.
தமது உரி­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக போரா­டிய இனக் குழு­மத்தை அதி­யுச்ச ஆயுத வன்­மு­றை­யில் சிதைத்­த­ழித்­தால் அந்த இனத்­தின் விடு­தலை நோக்­கிய பய­ணத்­தினை முடக்­கி­வி­ட­லாம் என்­கின்ற மோச­மான சிந்­த­னையை எம்மை அழித்த தரப்­புக்­கள் உரு­வாக்கி வைத்­தி­ருப்­பது இன நல்­லி­ணக்­கத்­துக்­கும் எதிர் காலச் சக­வாழ்­வுக்­கும் இடை­யூ­றா­கவே அமை­யும்.

அழிக்­கப்­ப­டும் ஒரு நிலை­யில் தமி­ழர்­கள் ஆயு­த­மேந்­தி­ய­போது ஜன­நா­ய­கம் மனித உரி­மை­கள் தொடர்­பில் வலி­யு­றுத்தி சர்­வ­தேச மத்­தி­யஸ்­தத்­து­டன் தமி­ழர்­கள் நல­னில் அக்­க­றை­கொண்ட சர்­வ­தேச நாடு­கள் இன்­றும் அதே பிரச்­சி­னை­கள் எமை விட்­ட­க­லாது சூழ்ந்­துள்ள நிலை­யில் ஆயு­தங்­க­ளற்ற இரா­ணு­வச் சம­நி­லை­யற்ற தமி­ழர் தரப்பை எங்­கள் நியா­யப்­பா­டு­க­ளில் கவ­னம்­கொள்­ளா­தது கவலை அளிக்­கின்­றது.
ஒன்­றா­கு­தலே இனத்­தின் இன்­றைய தேவை. வரு­கின்ற முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் தினத்­தில் அனைத்து உற­வு­க­ளும் அமைப்­புக்­க­ளும் அர­சி­யல்­கட்­சி­க­ளும் ஒன்­றி­னைந்து ஓர­ணி­யாக ஒன்­று­பட்டு செய­லாற்ற வர வேண்­டும் என்று அன்­பு­ரி­மை­யு­டன் அழைக்­கின்­றோம்.
பேதங்­கள் கோபங்­கள் வியாக்­கி­யா­னங்­கள் கோட்­பா­டு­கள் அனைத்­தை­யும் இத்­தி­னத்­தில் மற­வுங்­கள். முள்­ளி­வாய்­கால் என்­பது ஒரு இனத்­தின் விடு­த­லைக்­காக போரா­ளி­க­ளும் அதன் மக்­க­ளும் தீக்­கு­ளித்த மண். விடு­த­லைக்­க­ன­வு­டன் ஆயி­ரம்­ஆ­யி­ரம் வேங்­கை­க­ளும் பல இலட்­சக்­க­ணக்­கான மக்­க­ளும் தங்­கள் இன் உயிர்­களை ஆகு­தி­யாக்­கிய மண். விடு­தலை வேண்டி ஒன்­றாக போரா­டி­ய­நாம் அந்த விடு­த­லையை வேண்­டி­ய­வர்­கள் நினை­வில் கொள்­ளப்­ப­டும் கால­ம­தில் வில­கி­நிற்­ப­தில் எவ்­வித நியா­யப்­பா­டு­க­ளும் இல்லை.- என்­றுள்­ளது.