நடன பயிற்சியின் போது இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!-

பயிற்சியல் ஈடுபட்ட பெண் ஒருவர் மேடையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் கொழும்பு, பம்பலப்பிட்டிய தூய பீட்டர் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
வெப்புவ, சிலாபம் வீதியில் வசிக்கும் திலினி நிராஷா (வயது 26) என்ற பெண்ணே இவ்வாறு உயிரழந்துள்ளார்.
நடன பயிற்சியின் பின் அந்த குழுவினருடன் இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
நடன பயிற்சிக்கு முன் அந்த குழுவினரின் உணர்வுகளை அதிகரிப்பதற்காக பயிற்சியாளர் வழங்கிய செயற்பாடு பிழைத்தமையே குறித்த பெண் உயிரிழக்க காரணம் என தெரிகிறது.

பாய்ந்து ஆடும் நடனத்தின் போது மேடையின் உயரமான இடத்தில் பாய்ந்த குறித்த பெண் எதிர்பாராமல் கீழே விழுந்துள்ளார்.
அதாவது சமிக்ஞை வழங்குவதற்கு முன்னர் குறித்த பெண் கீழே விழுந்தமையால், விழும் போது அவரை யாராலும் பிடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் குறித்த பின் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகிறது.

Allgemein