கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்! பாடலில் நெகிழ்ந்தது வல்வை மண்

வட தமிழீழம், வல்வை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஒலித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதத்தினால் ஊர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.
வல்வை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (29) இரவு இந்திரவிழா நடைபெறுகின்றது. நேற்று தேர்த்திருவிழாவும் நேற்றுமுன்தினம் (27) வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழாவும் நடைபெற்றது.
வேட்டைத்திருவிழாவின்போதே
“ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று”
எனும் பாடலும்
“கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் கண்டதும் சிங்களம் கலங்கிடிம் வெல்வோம்”
எனும் பாடலும் தவில் ,நாதஸ்வர இசையாக பாடப்பட்டது.
பாடல் முடிந்ததும் மக்கள் நெகிழ்ச்சியால் மகிந்து போயினர்.

தாயகச்செய்திகள்