ஏமனில் வான்வழி தாக்குதல்! முக்கிய தலைவர்கள் உட்பட 38 பேர் பலி!

ஏமன் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் தலைநகர் சனாவில், ஹூதி கிளர்ச்சியாளர்களின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தைக் குறிவைத்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில், ஹூதி கிளர்ச்சிப் படையின் முக்கியத் தலைவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக சவூதி அரசு ஊடகங்கள் தெரிவித்தாலும், யேமன் உள்துறை அமைச்சகக் கட்டடத்தில் நடத்தப்பட்ட அத் தாக்குதலில் 38 பேர் பலியானதாக அல்-அரேபியா தொலைக்காட்சிதெரிவித்தது.

உலகச்செய்திகள்