இலங்கையில் கிராமத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரங்கு!

இலங்கையில் குரங்கு ஒன்றால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் எல்பிட்டிய, கெடன்தொல, உடோபிட்டிய பகுதியில் வாழும் மக்கள் குரங்கு ஒன்றால் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் சமீப கால்மாக இந்த பகுதிகளில் வாழும் குரங்கு ஒன்று மக்களை கடித்து வருவதாகவும், இதனால் 20 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் குரங்கு கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக வனவிலங்கு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகவும், ஆனால் குரங்கை பிடிப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein