நட்சத்திர ஹோட்டலில் சிக்கிய விமல்!

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஆரம்பர விருத்து வைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி ஷங்கிரிலா ஹோட்டலில் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை செலவிட்டு இந்த விருந்து நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
2017ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சையில் சித்தி பெற்ற தனது மகளுக்காக, வீரவன்ச விருந்து வைத்துள்ளார்.

இந்த விருந்தில் 800 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஷங்கிரிலா ஹோட்டலில் ஒருவருக்கான உணவின் பெறுமதி 6650 ரூபாவாகும். விருந்தில் கலந்து கொண்டவர்களின் உணவிற்கு மாத்திரம் 5,320,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
விருந்தின் பின்னர் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி விமல் வீரவன்ச உட்பட குடும்பத்தினர் கதிர்காமம் கோயிலுக்கு சென்று மகளின் பரீட்சைக்காக செய்த நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Allgemein