சிறிலங்காவில் பௌத்த சிங்கள பேரினவாத அரசின்“மே தினம்“.

சிறிலங்காவில் பௌத்த சிங்கள பேரினவாத அரசின் கோரப்பற்களுக்குள் இரையாகி போகின்ற உழைப்பாளிகள் நாளான „மே தினம்“.
எங்கே போனார்கள் புரட்சியாளர்கள் என எவரும் சிங்கள மக்களுக்குள் உழைப்பாளிகளுக்காக குரல் கொடுக்க இல்லையா?
ஒரு தனி மதத்தின் பெயரால் இலங்கை அரசாங்கம் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்தை தள்ளிப்போட்டிருக்கிறது.
தமிழர்களை கொன்று குவித்த பொழுது தான் தட்டி கேட்கவில்லை இடதுசாரி கட்சிகளான ஜே. வி. பி., முன்னணி சோஷலிச கட்சி போன்ற கட்சிகள்.

இப்பொழுது இலங்கையில் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பௌத்தர்களின் புனித நாளான வெசாக் கொண்டாட்ட காலத்தில் சர்வதேச உழைப்பாளர் நாள் வருகின்றதென்று அரசாங்கம் அதனை தள்ளிவைத்திருக்கிறது.
தொழிலாளர்களின் உரிமைகளை எடுத்தியம்பும் அனைத்துலக பிரகடன நாளான மே தினம் உலகத்தோடு ஒத்ததாக அன்றைய நாளே உழைக்கும் மக்களால் கொண்டாடப்படுகின்றது.
ஆனால் சிறிலங்கா அரசின் பௌத்த சிங்கள இனவெறி இந்த நாளை மாற்றியிருக்கிறது. உலகத்தின் எந்த நாட்டிலும் நடக்காத ஒரு செயல்!
இது உலகின் உழைக்கும் மக்களின் போராட்டங்களை தியாகங்களை இழிவு படுத்தும் செயல்.
உண்மையான புரட்சியாளர்கள் இதனை தட்டி கேட்டு மே 1 அன்று தொழிலாளர் நாளை அனைத்து அடக்குமுறைகளையும் தகர்த்து ஊர்வலம் சென்று அடையாளப்படுத்தி காட்டுவார்கள்.
அதற்காக தென்னிலங்கை இடது சாரிகள் யாழில் வந்து ஊர்வலம் செய்வது மே தினத்திற்கு அழகல்ல.
அந்த அந்த மண்ணில் உழைக்கும் மக்களின் நாளான மே நாள் அந்த அந்த மக்களால் நினைவு கூறப்பட வேண்டும்!!!!!
அதுவே எமக்காக உயிர் கொடுத்த உலக பொதுமை தலைவர்களுக்கு நாம் செலுத்தும் செவ்வணக்கமாகும்

Allgemein