சோரம்போகாத தமிழர் தலைமைத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழர் வாழ்வியல் வரலாற்றில் பெரும்பான்மை சிங்களவர்களால் தமிழினம் காலத்துக்கு காலம் நசுக்கப்பட்ட இனமாகவும் இல்லையேல் அழித்தொழிக்க முற்பட்ட ஒரு இனமாகவும் இருந்து வந்தது வரலாறு.
இந்த வரலாற்று பாதையில் தமிழரின் இன்னலுக்கு தலைநகரில் இருந்து குரல்கொடுத்த ஒரே தனித்தவமான தலைவனாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் இருந்து வந்தது கண்கூடு.
தமிழர்களில் உச்ச அழிவுக்குப் பின்னரான விடுதலைப் புலிகளுடனான போர் மௌனித்த பின்னரான இன்றைய இந்தக் காலப்பகுதியில்,
ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளின் கவனமும் இலங்கைப் பக்கம் திரும்பியுள்ள இந்த நேரத்தில் தலைநகரில் சோரம் போகாத தனித் தமிழ் தலைவனான மனோகணேசன் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய கால கட்டம் இதுவாகும்.
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் கட்சி மாநகரசபை குழுத் தலைவரும், மாநகரசபை ஸ்தாபனம் மற்றும் மனிதவள அபிவிருத்திகள் தொடர்பான நிலையியற்குழு தலைவருமான சி.பாஸ்கரா தெரிவித்தார்.
தலைநகர் கொழும்பு என்பது ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்கள், பாராளுமன்றம், உலக நாடுகளின் தூதுவரலாயங்கள், தேசிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் தளம் ஆகவும் இந்த கொழும்பு மாவட்டம் இருக்கின்றது.
இங்கு உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைமை அத் தலைமை பலம் பொருந்தியதாகவும் தலைமையானது சோரம் போகாமல் ஒரு இனத்தக்காக உரத்து இடித்துரைத்து கருத்துரைக்கக் கூடியதாகவும் இருத்தல் மிக முக்கியமானது.
இந்த நோகத்தில் பார்க்குமிடத்தில் கடந்த ஒர தசாப்தத்திற்கு முதல் தலைநகரில் கடத்தல் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உரத்துக் குரல்கொடுத்து உலக நாடுகளால் மிகம் அறியப்பட்டவர்.
அதற்காக அமெரிக்க அரசால் Human Rights Freedom Defender எனும் மிக உயரிய விருது அமெரிக்க அரசால் வழங்கப்பட்டவரும்,
ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருந்ததன் மூலம் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் 8 மாகாண சபை உறுப்பினர்களையும் 106 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை உருவாக்கி,
ஒரு தனித்துவமான கட்சியாக நிலைநிறுத்தியது மட்டுமன்றி முன்னைய அரசு காலங்களில் பல அமைச்சுப் பதவிகள் தேடி வந்தும் கூட சோரம் போகாமல் எதிரணியில் இருந்து குரல் கொடுத்த வரலாறு மறக்கக் கூடியதல்ல.
மேற்கூறிய காரணிகள் தலைநகரில் மனோகணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் இருப்பின் அவசியத்தை தெட்டத்தெளிவாக தெரிந்து கொள்ள முடிகின்றது.
பெரும்பான்மை கட்சிகள் தாமே தமிழ் இனத்தின் பாதுகாவலன் தமிழினத்தின் வளர்ச்சியில் பாரிய பங்காற்றுவதாக பசுப்பு வார்த்தைகள் வீசி மக்களை திசை திருப்ப முயல்கின்றனர்.
இவ் வேளையில் எமது ஜனநாயக மக்கள் முன்னணி வடக்கு கிழக்கு மலையகம் மேலகம் என தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் உரத்து குரல்கொடுக்கின்றார்.
அதேவேளை சகோதர இனத்தின் இன்னல்களுக்காகவும் குரல்கொடுக்க என்றும் பின்னின்றதில்லை என்ற காரணத்தினால் சகோதர இனத்தவரையும் அரவணைத்துக்கொண்டு பெரும்பான்மை கட்சியுடன் இணைந்திருந்தாலும் கூட எமது தனித்துவத்தை என்றும் விட்டுக்கொடுக்காமல் பெருங்கட்சிகளை விமர்சிக்க வேண்டிய இடத்தில் விமர்சித்துக்கொண்டு
எமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமலும் சுய உரிமைகளை நிலை நிறுத்திக்கொண்டு எமது கட்சிப் பயணம் வெற்றி நடைபோடுகிறது.
பெரும்பான்மை கட்சிகளால் ஜீரணிக்க முடியாமல் எமது கட்சி அழித்தொழிக்க இலக்கு வைக்கப்பட்டிருப்பது கண்கூடு.
இந்த இக்காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் தனித்துவமான எமது கட்சியின் இருப்பை பலவீனப்படுத்த விட்டுவிடலாகாது.
மேலும் பதவிப் பிரச்சனைகளும் கருத்தை இடித்துரைத்த கருத்துப்பதிவுகளும் கருத்துப்பரிமாற்றங்களும் மாற்றமடையக் கூடியவை நியாயம் நிலைநிறுத்தப்படக்கூடியவை.
அறையில் கூடிப்பேசி தீர்க்க வேண்டியவையே அன்றி தெருவில் பேசப்படுபட்டு பிரச்சனைகள் ஆக்கப்படுபவைகள் அல்ல.
இவை ஒரு இனத்தின் இருப்பை நோக்கி சிந்தித்துப் பயணிக்கின்ற தலைமையில் வழிவந்தவர்களுக்கு ஏற்புடையதல்ல.
மேலும் இக்காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் எமக்குள் உள்ள பிறழ்வுகளை புறந்தள்ளி வடக்கு கிழக்கு மலையக தமிழர்களின் உரிமைகள் உரத்து பேசப்பட்டு விடிவை நோக்கி பயணிக்க வேண்டும்.
மேலும் பெரும்பான்மைக் கட்சிகளின் விருப்பான எமது கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாமல் இருப்பது அவசியமாகும் என்றார்.
போரின் போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையாத ஒரு நிலையே காணப்படுகிறது.
அவர்களது நிலை கண்டு, சரியான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் நகர்கிறது நாட்கள்.

Allgemein