மாற்றுத்திறனாளியான வயோதிப பெண்ணின் கடை தீக்கிரை…..!

செம்மலைப்பகுதியில் பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் வைத்து நடத்தி வந்த சிறிய கடை ஒன்று நேற்றையதினம்(24.04.2018) இரவு தீயில் எரிந்து சம்பலாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…….
முல்லைத்தீவு 03 ஆம் குறுக்குத்தெரு செம்மலைப்பகுதியில் வசிக்கும் 60 அகவையுடைய நாகேந்திரம் அமராவதி என்ற மாற்றுத்திறனாளியான வயோதி பெண் தனது வாழ்வாதாரத்திற்கா வீதி ஓரம் வைத்து நடத்தி வந்த கடை ஒன்று தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த வயோதிப மாது ஒரு மாற்றுத்திறனாளி என்பதுடன் போரில் பாதிக்கப்பட்டு உடல் காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த சிறிய கடையினை வைத்து தனது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

செய்திகள்