கனடிய மண்ணில் „உறங்கா விழிகள்“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஒரு சாட்சியாக!

போராட்டத்தில் அங்கமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஒரு சாட்சியாக இருந்த ஒரு படைப்பாளியான ஈழத்து சுந்தர் என்ற உறவு 2009 இன் பின் நாட்டை விட்டு வெளியேறியும் இன்று வரை ஒரு நாட்டுக்கு கரை ஒதுங்காமல் அகதியாக 3 பிள்ளைகளுடன் குடும்பமாக நடுவழியில் இந்தோனேசிய மண்ணில் முகாமில் பரிதவிக்கும் கொடிய வாழ்வியல் சூழலிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சாட்சி கூறி காட்சிகளை ஆவணப்படுத்தும் வகையில் எழுதிய 10 பாடல்களை பாசறை கவிஞன் தேனிசை செல்லப்பா மற்றும் அவர் குடும்ப உறவுகள் பாடி கொடுக்க கனடிய மண்ணில் „உறங்கா விழிகள்“ என்ற தாயக மக்களின் துயர் தீர்க்க கனடிய தமிழ் வானொலியூடாக பிரதி செவ்வாய் கிழமைகளில் காற்றலையில் தமது பணிகள் பற்றி எடுத்துரைத்து மக்கள் ஆதரவை பெற்று செயல்பட்டு வரும் அமைப்பு கனடிய தமிழ் வானொலியூடாக பிரதி செவ்வாய் கிழமைகளில் மாலை வானவில் நிகழ்ச்சியில் 1:00 மணிக்கு இடம் பெரும் „நிலத்தை நோக்கி நீளும் கரங்கள்“ நிகழ்ச்சியூடாக அதன் நிறைவேற்று இயக்குனர் சோமசுந்தரம் ஐயா அவர்களூடாக நிதி சேகரித்து ஒரு வரலாற்று ஆவணப்படைப்பாக ஒலிப்பேழையாக வெளி கொண்டு வந்துள்ளது.
இதற்காக அரும்பாடுபட்ட அனைத்து இசை கலைஞர்கள், பாடல்களை எழுதிய ஈழத்து சுந்தர், , ஐயா தேனிசை செல்லப்பா குடும்பத்தினர் மற்றும் உறங்க விழிகள் அமைப்பினருக்கு பாராட்டுக்கள்!
இந்த ஒலிப்பேழை எதிர் வரும் மே மாதம் 12 ஆம் நாள் கனடிய மண்ணில் வெளியிடப்பட இருக்கின்றமை பெரும் மகிழ்ச்சி.
உள்ளத்தை உருக்கும் பாடல்கள் உயிரை தொடும் முள்ளிவாய்க்கால் இறுதி காட்சிகளினை சித்தரிக்கும் உண்மையின் சுடும் வரிகளூடாக உயிர் வரிகளாக விழிகளை கசிய வைக்கின்றன.
அனைவரும் இந்த ஒலிப்பேழையை பெற்று பாடல்களை கேட்டு தாயக மக்களின் துயர் துடைப்பு பணியில் உங்களை இணைத்து கொள்வதோடு இந்த பாடல்களை எழுதிய ஈழத்து சுந்தரின் ஒப்பற்ற காலப்பணியை வாழ்த்தி ஆக்கமும் ஊக்கமும் வழங்குங்கள் என வேண்டுகின்றேன்.
இந்தோனேசிய மண்ணில் அகதியாக வாழும் கொடுமைகளை அனுபவிக்கும் இவரின் பிள்ளைகள் பாடசாலை இன்றி முகாமில் முடங்கி வாழ்கின்றார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி அகதிகள் என்ற நிலை கடந்து எதிர்காலம் என்ன என ஏங்கும் வாழ்வோடு போராடும் நிலையிலும் ஈழத்து சுந்தர் எழுதிய இந்த பாடல்கள் காலத்தின் பெட்டகத்தில் போற்றப்பட வேண்டிய அரும் சொத்துக்கள்!

உலகச்செய்திகள்