அழிவை ஏற்படுத்தும் பயங்கர ஆயுதம் ரஷ்யா கையில்:

ரஷ்யாவிடம் சுமார் 320 அடிக்கு மேல் சுனாமி அலைகலை ஏற்படுத்தும் அளவிற்கு அதிபயங்கரமான அணு ஆயுதம் இருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோவில் கடந்த மாதம் நடந்த மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்யாவிடம் பலமான பல அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோவை பெரிய திரையில் காண்பித்தார்.
இந்நிலையில் ரஷ்யாவின் அந்த புதிய அணு ஆயுதம் பற்றிய சில திடுக்கிடும் தகவல்களை இயற்பியல் மற்றும் அணு ஆயுத ஆராய்ச்சியாளரான Rex Richardson பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதை அவர், புடினின் அழிவை ஏற்படுத்தக் கூடிய இயந்திரம் என்றும் இதை Status-6 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நீருக்கடியில் சுமார் 50 மெகாடன் எடை கொண்ட அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது இந்த அணு ஆயுதம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 328 அடிக்கு சுனாமி அலைகலை உண்டாக்கி அழிவை ஏற்படுத்தக் கூடிய பயங்கரமான ஆயுதம் என்றும், இதனால் கடலோர பகுதிகள் முற்றிலும் அழிவதுடன், அருகிலிருக்கு நகரங்களும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Status-6-ஆனது 6,200 மைல் தூரம் வரை செல்லக் கூடியது.
அதுமட்டுமல்லாது நீரின் உள்ளே 100.8 கி.மீற்றர் வேகத்தில் இருக்கும் என்பதால் எதிரிகள் இதை அடையாளம் கண்டாலும் அவ்வளவு எளிதில் இதை வீழ்த்திவிட முடியாது என்றும் கோடிட்டு கூறியுள்ளார்.
அத்தோடு 20 மெகா டன் முதல் 50 மெகா டன் வரை அணு ஆயுதங்களை நிரப்பி கடற்கரையோரப் பகுதியில் தாக்குதலை நடத்தினால்,
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி வந்த போது மக்கள் உயிரிழந்ததைப் போன்றதொரு தாக்கம் ஏற்படுமென தெரிவித்துள்ளார்.

Status-6 நீருக்கடியிலே கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டதாம்.
இது அமெரிக்காவின் கடலோரப்பகுதியில் வெடிப்பை ஏற்படுத்துமாயின் கடலோரப் பகுதிகள் முற்றிலும் அழிவதுடன் குறிப்பாக Los Angele அல்லது San Diego பகுதிகள் இருக்கும் இடம் தெரியாமலே அழியும் நிலை ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

உலகச்செய்திகள்