சற்று முன் பளையில் வி-புலிகளின்பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன ?

சற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பிராந்திய புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார். காணியின் உரிமையாளர் அங்கே இருந்த பற்றைகளை அகற்றி காணியை சுத்தம் செய்துள்ளார். திடீரென அவர் அங்கே பற்றைக்குள் மறைந்து இருந்த சிறிய காங்கிரீட் வாசல் ஒன்றை கண்டுள்ளார்.

வாசல் சிறிதாக இருந்தாலும், உள்ளே செல்ல அது நிலக்கீழ் பதுங்குகுழி என்பது அவருக்கு புயவே அவர் உடனே ராணுவத்தினருக்கு தகவல் சொல்லியுள்ளார். விரைந்து வந்த ராணுவத்தினர் அவ்விடத்தை சுற்றிவளைத்து தேடிவருவதாக கூறப்படுகிறது.  உள்ளே என்ன இருக்கிறது ? என்பது தொடர்பாக குண்டை செயல் இழக்க செய்யும் பிரிவை வரவளைத்த பின்னரே தெரிவிக்க முடியும் என்று ராணுவத்தினர் கூறியுள்ளார்கள்.

தாயகச்செய்திகள்