முன்னாள் ஜனாதிபதிகளால் நிறைவேற்ற முடியாததை மைத்திரி நிறைவேற்றுவாராம்!!

முன்னாள் ஜனாதிபதிகளால் நிறைவேற்ற முடியாததை செய்து முடிப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன் போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக தெரிவித்தே 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆட்சி மாற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அந்த நிலைப்பாடு தற்போது வரை தொடர்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.