வலி.வடக்கில் மரங்களை தறிப்பதற்கு அனுமதி பெறவேண்டும்

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளை, சுத்திகரிக்கும்போது அதிலுள்ள மரங்களை அகற்றுவதற்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறி மரங்களை தரிப்பவர்களுக்கு எதிராக காவல்துறை ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தங்களை கிராம அலுவலர்களிடம் பதிவு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி மயிலிட்டி, கட்டுவன், தென்மயிலை, தையிட்டி ஆகிய பகுதிகளில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தாயகச்செய்திகள்