மைத்திரிக்கு லண்டனில் ஏற்பட்ட நிலை? மஹிந்த கவலை

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்தின் போது புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதிக்கு புலி ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியமை குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. இவ்வாறு கூறினார்.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கூட வடக்கிலுள்ள சில பகுதிகளில் அரசாங்கம் தோல்வியடைந்திருந்தது. இது தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ளமையையே எடுத்துக் காட்டுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. சுட்டிக்காட்டினார்.