இந்திய தேசியக் கொடி, மோடியின் உருவத்தை காலில் மிதித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

இந்தியாவின் காஷ்மீரில் சிறுமி ஆஷிபா 8 பேரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி கொழும்பிலுள்ள முஸ்லிம் மக்கள் இணைந்து இந்திய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் மற்றும் இந்திய தேசியக் கொடியை நடுவீதியில் எரிந்து காலில் மித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வழங்கிய மகஜரை இந்திய தூதரக அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.