149 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பெண் விமானி: குவியும் பாராட்டுக்கள்!!

அமெரிக்காவில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கி 149 பயணிகளை பெண் விமானியான டேமி ஜோ சல்ட்ஸ் காப்பாற்றியுள்ளார்.

இவர் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டல்லாஸ் நகருக்குச் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு எஞ்சின் கோளாறால் வெடித்தது.

இதை அறிந்ததும் குறித்த பெண் விமானி டேமி ஜோ சல்ட்ஸ் விமானத்தை அவசரமாகப் பிலடெல்பியாவில் தரையிறக்கியுள்ளார்.

இதன்மூலம் 149 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. திறமையாகச் செயல்பட்டு விமானத்தை அவசரமாகத் தரையிறக்கிய குறித்த பெண் விமானியை பயணிகள் பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்.

56 வயதாகும் டேமி ஜோ சல்ட்ஸ் அமெரிக்கக் கடற்படையில் போர் விமானங்களை இயக்கிய முதல் பெண் விமானி என்பது குறிப்பிடத்தக்கது.

1985 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்த அவர் படிப்படியாக லெப்டினன்ட் கமாண்டர் நிலை வரை உயர்ந்தவர்.

பத்தாண்டுகள் கடற்படையில் பணியாற்றிய பிறகு சவுத்வெஸ்ட் ஏர்லைன்சில் அவர் விமானியாகப் பணியில் சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகச்செய்திகள்