ஜேர்மனியில் நாய்க்கு மரண தண்டனை – காரணம் உள்ளே!

ஜேர்மனியில் நாய்க்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகள் என நினைத்து வளர்க்கும் விலங்குகளே நமக்கு ஆபத்தாகவும் சில நேரங்களில் மாறிவிடுகின்றன. இதனடிப்படையில் இந்த மாத தொடக்க பகுதியில் சிக்கோ என்ற இன வகையை சேர்ந்த டெரியர் நாய் ஒன்று, தன்னை வளர்த்த பெண்ணையும், அவரது மகனையும் கொன்றுள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு வந்த குறித்த பெண்ணின் மகள் இறந்தநிலையில் காணப்பட்ட தனது தாயார் மற்றும் சகோதரன் குறித்து பொலிஸார்க்கு தெரிவித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இருவரது உடல்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதனடிப்படையில் நாய் கடித்து இறந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நாய்க்கு மரண தண்டனை விதித்துள்ளார். ஆனால் நாய்க்கு மரண தண்டனை வழங்கப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்