வடமராட்சி கிழக்கு ஆழியவளை சம்மாட்டி ஒருவருக்கு அடித்த அதிஷ்டம்..!

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் சம்மாட்டி ஒருவரின் கர வலையில் 08 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான மீன்கள் மாட்டியுள்ளன.

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே இவ்வாறு மீன்கள் அகப்பட்டுள்ளது.

மீனவருடைய வலையில் சுமார் 08 ஆயிரம் கிலோ பாரை மீன் அகப்பட்டுள்ளது. இந்த மீனின் இன்றைய சந்தை பெறுமதி 1 கோடி ரூபாய்க்கு மேலானது என கூறப்படுகின்றது.

மேலும், இன்று குறித்த மீனவரிடம் இருந்து 27 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான அதிஷ்டம் மீனவர்களுக்கு எப்போதாவது, கிடைப்பதாகவும் இவ்வாறாக மீன் பிடிபடுவது ஆச்சரியம் எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

இதே கடலில் பல மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி கடலில் தங்கள் உயிர்களை கடல் அன்னைக்கே சமர்ப்பணம் கொடுத்தனர் என்பது வரலாற்று உண்மையாக