கட்டுநாயக்கவில் கூரை பெயர்ந்து விழுந்தது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததால், குடிவரவுத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டன. கடும் மழை காரணமாக, கடந்த  வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதியில் உள்ள கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தது.

இதனால் குடிவரவுச் சோதனைகள் நடத்தப்படும் பகுதியில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

குடிவரவுச் சோதனைக்காக உள்ள பத்து சாவடிகளில்,  மூன்று சாவடிகள் இதனால் மூடப்பட்டன.

கடும் மழை பெய்யும் போது இதற்கு முன்னரும் கட்டுநாயக்க விமான நிலைய கூரை பெயர்ந்து விழுந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், இத்தகைய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

Allgemein