ஜப்பான் நாட்டின் பொறியாளர் ஒருவர் ஹாலிவுட் படங்களில் வருவதை போன்றே நடக்கும் ராட்சத மனித வடிவ ரோபோக்களை உருவாக்கி உள்ளார்.
28 அடி உயரத்தில் 7 டன் எடையுடன் உள்ள அந்த ரோபாவில் ஏறி அமர சிறிய லிப்ட் வசதி உள்ளது.
ஏறி அமர்ந்து விட்டால் அதனை இயக்கி நகர்ந்து செல்லவும், அதன் ஒரு கையில் உள்ள துப்பாக்கி மூலம் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பூபந்துகளை குண்டுகளை போல சுட முடியும் என அதனை வடிவமைத்துள்ள மாசாகி நகுமோ கூறியுள்ளார்.
மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மட்டுமே தமது ரோபோவின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.