கனடா சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த சோகம்

கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடல்கள் பூந்தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை யாழ்ப்பாணம் கச்சேரியடியைச் சேர்ந்த கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்ற 40 வயது நபரும் அடங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைகள் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன் நடைபெற்றுள்ள நிலையிலும், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம், நடைபெற்ற விசாரணை மூலமே பூந்தோட்டம் ஒன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.