தலைநகர் கொழும்பில் ஏற்படப் போகும் மாற்றம்!!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் குறைவருமானம் பெறும், குடிசைகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்;முதற்கட்டமாக 50 ஆயிரம் வீடுகளை அமைத்து,

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை குடியேற்றவுள்ளதோடு, அடுத்த சில வருடங்களில் இந்த செயற்றிட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தத் திட்டத்தின் இரண்டாம், மூன்றாம் கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும் பட்சத்தில், கொழும்பில் வீடில்லாப் பிரச்சினைக்கு முழுயான தீர்வு காணப்படும். குடிசைகளில் வாழும் மக்களை அந்த வீடுகளில் குடியமர்த்திய பின்னர் அந்த இடங்களை வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியும்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் 10 வருடங்களில் கொழும்பில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும் அகற்றப்பட்டு விடும்.

முதற்கட்டமாக 2023ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை அமைத்து குறை வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியமர்த்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Allgemein