தமிழ் பெண்ணாக மாறிய பிரித்தானியாவின் வருங்கால இளவரசி: சுவாரசியமான தகவல்.

பிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் தமிழ் பாராம்பரிய முறைப்படி புடவையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மே 19 ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளவரசர் ஹரி- மெர்க்கல் ஜோடி, தங்களது திருமணத்தின் போது கிடைக்கும் பரிசுப்பொருட்களை தொண்டு நிறுவனங்களிடம் வழங்கவிருக்கின்றனர்.

அதற்காக, உலகம் முழுவதும் இருந்து 7 தொண்டு நிறுவனங்களை தெரிவு செய்துள்ளனர். இதில் மும்பையை சேர்ந்த Myna Mahila Foundation என்ற தொண்டு நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் அமைப்புடன் தொடர்புடைய தொண்டு நிறுவனத்தை பார்வையிடுவதற்காக மெர்க்கல், கடந்த ஆண்டு மும்பை வந்திருந்தார்.

அப்போது, இந்திய பாரம்பரியப்படி புடவை அணிந்து, கையில் வளையல், நெற்றியில் பொட்டு என பார்ப்பதற்கு அச்சு அசலாக தமிழ் பெண் போலவே இருந்தார்.

உலகச்செய்திகள்