கள்ளநோட்டுகளுடன் வவுனியாவில் சிக்கய நபர்: மக்களுக்கு எச்சரிக்கை

யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணியிடம் இருந்து பெருந்தொகை கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (11) மாலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பயணியிடம் இருந்து 1000 ரூபாய் பணத்தாள்கள் 45, மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதானவர் 35 வயதான அலவ பிரசேத்தை சேர்ந்த பிரியந்த சமரசேகர எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழில் போலி பணங்களை அச்சிடுபவர்களிடமிருந்து குறித்த நபர் பணம் பெற்றுச் செல்வதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Allgemein