நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர்களுக்கு பதவி உயர்வு!

வடக்கு மாகாணத்தில் நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர்கள் மூவர், நீதிமன்றப் பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அவர்களுக்கான நியமனம் வரும் 23ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவை மூப்பிலுள்ளவர்களை போட்டிப் பரீட்சை மூலம் நீதிமன்றப் பதிவாளர் சேவை தரம் 3இற்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதில் வடக்கு மாகாணத்தில் மூவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் கந்தசாமி நவநீதன் (சட்டத்தரணி) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றப் பதிவாளராகவும் வவுனியா மாவட்ட நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் கந்தசாமி கஜரூபன், மல்லாகம் மாவட்ட நீதிமன்றப் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர் இரட்ணசபாபதி குகதாஸன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றப் பதிவாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

Allgemein