சி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு!

இராமலிங்கம் முரளிகரன் சுவிஸ்.. சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கு புலத்திலிருந்து ஆதரவும் உதவியும் நல்கி சிறுப்பிட்டி மண்ணை தரிசிக்க வருகின்ற புலம்பெயர் உறவுகளை நன்றி கூர்ந்து பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகளின் தொடர்களில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த திரு.இராமலிங்கம் முரளிகரன் சுவிஸ் அவர்களை ( 10.04.2018)அன்று சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய.s. சுரேஸ்குமார் மற்றும் தலைவர், செயலாளர், இளைஞர்கள் ஆகியோர்களால் நன்றி கூர்ந்து பாராட்டிய தருணம்.

சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கும், அதன்செயல்பாட்டாளருக்கும் இராமலிங்கம் முரளிகரன் அவர்கள் நற்பணிக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டையும் கூறிநிற்கின்றது சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியம்

தாயகச்செய்திகள்