வடக்கு மாகாணத்தில் விக்னேஸ்வரனுக்கு பதிலாக சர்வேஸ்வரன் பதவியேற்பு!!

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் நாளை பொறுப்பேற்கிறார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்­றுப்­ பயணம் ஒன்­றை மேற்கொண்டு இன்று தமி­ழகம் பயணமாகிறார்.

அவர் இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்­கி­யி­ருப்பார் என தெரிகிறது. இந்த நிலையில் வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் நாளை பதவியேற்கிறார்.

பத்தரிமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நாளைக் காலை 10.30 மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் க.சர்வேஸ்வரன் பதவியேற்கிறார்.

தாயகச்செய்திகள்