இது என்னடா புது வம்பா இருக்கு!

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு நாட்டில் இரண்டு சட்ட விதி முறைகளை பொலிஸார் கையாள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் ஒரு சட்டத்தையும் வெளிமாவட்டங்களில் ஒரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நகரில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்கின்றனர்.

இதன்போது நீதிமன்றில் உள்ள சட்டத்தரணிகளுக்கு 1000 ரூபாவும் குற்றத்திற்கு அபராதமாக 1000 ரூபாவும் சாரதிகளால் செலுத்த நேரிடுகின்றது.

ஆனால் கொழும்பு தவிர்ந்த வெளிமாவட்டங்களில் இந்த குற்றத்திற்காக 100 ரூபா மாத்திரமே அறவிடப்படுகின்றது.

பொலிஸ் சுற்றரிக்கையின் பிரகாரமே நாட்டில் இந்த இரு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு சம்பவ இடத்திலேயே அறவிடத் தீர்மானித்த 25,000 ரூபா அதிகூடிய தண்டப்பணம் 3,000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 33 வீதி ஒழுங்கு மீறல்களுக்கு 500 ரூபா முதல் 3,000 ரூபா சம்பவ இட தண்டமாக அறவிட பாராளுமன்றில் நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Allgemein