புற்றுநோயை கண்டறியும் உடல் உறுப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!!

இந்த உறுப்பு மனித உடலின் மீதான நமது பார்வை புரிதலை மாற்றும். இது திரவம்
நிரப்பட்ட ஒரு தொகுப்பாகும்.இதற்கு முன்பு அடர்ந்த, இணைப்பு திசுக்கள் அதிர்ச்சி உறிஞ்சிகளாக செயல்படக்கூடியவையே. புற்றுநோயை பரப்புவதாக எண்ணப்பட்டு வந்த நிலையில், இந்த உறுப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Interstitium எனும் இவை, ஒன்றோடொன்று இணைந்து இருக்கும். அத்துடன், தோலின் மேல் அடுக்குக்கு கீழே இருக்கும் ஒரு நகரும் திரவத்தின் ஓட்டம் போல் இருக்கும்.இந்தக் கோடுகள் போன்ற அமைப்பானது செரிமான பாதை, நுரையீரல், சிறுநீரக அமைப்புகள், தமனிகளை சுற்றிய நரம்புகள் மற்றும் தசை இடையே உள்ள திசுப்படலம் ஆகியவற்றை சுற்றி உள்ளதாக, இது குறித்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரவ தொகுப்பு அமைப்பானது, தனித்துவமான உறுப்பாக இருக்கலாம் என நம்பும் ஆராய்ச்சியாளர்கள், உடலின் சில பகுதிகளுக்கு புற்றுநோய் பரவுவது எப்படி என்பதையும் இதன் மூலம் கண்டறியலாம் எனத் தெரிவித்துள்ளனர்.இந்த திரவ அமைப்பு, ஒரு சக்தி வாய்ந்த கண்டறியும் கருவியாக மாற சாத்தியக் கூறுகள் உள்ளதாக கருதப்படுகின்றது.

Allgemein